Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பால் நிலக்கரி இறக்குமதி 5.83% சரிவு

உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பால் நிலக்கரி இறக்குமதி 5.83% சரிவு

நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களுக்கான நிலக்கரி இறக்குமதி முந்தைய ஆண்டின் 22.77 டன்னிலிருந்து 6.39 சதவீதம் குறைந்து 21.32 டன்னாகப் பதிவாகியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

மத்திய அரசு மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் பலனாக, நாட்டின் ஒட்டுமொத்த நிலக்கரி இறக்குமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 5.83 சதவீதம் சரிவடைந்துள்ளதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் மொத்த நிலக்கரி இறக்குமதி 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 111.05 மில்லியன் டன்னாக இருந்தது. இந்நிலையில், நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 6.48 மில்லியன் டன் குறைந்து, 104.57 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது. நிலக்கரி இறக்குமதிக்கான சார்பு நிலையைக் குறைக்கும் வகையில், உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதற்கும், இருப்பை மேம்படுத்துவதற்கும், விநியோகச் சங்கிலியை நவீனப்படுத்துவதற்கும் நிலக்கரி அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகளே இந்த முன்னேற்றத்துக்கு காரணமாக உள்ளது.

குறிப்பாக, நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களுக்கான நிலக்கரி இறக்குமதி முந்தைய ஆண்டின் 22.77 டன்னிலிருந்து 6.39 சதவீதம் குறைந்து 21.32 டன்னாகப் பதிவாகியுள்ளது.

அதேபோல, உள்நாட்டு நிலக்கரியைப் பயன்படுத்தி இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி கலப்புக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அளவு 35.23 சதவீதம் அளவுக்கு சரிவடைந்துள்ளது. இதன் மூலம், முந்தைய ஆண்டில் 4.64 மில்லியன் டன்னாக இருந்த கலப்பு நிலக்கரி இறக்குமதி தற்போது 3.00 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது.

அதேநேரம், இறக்குமதி நிலக்கரியை மட்டுமே நம்பி இயங்கக்கூடிய மின் நிலையங்களின் இறக்குமதி 18.13 மில்லியன் டன்னிலிருந்து 18.31 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரி நுகர்வில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் பங்களிப்பானது, கடந்த ஆண்டு ஆகஸ்டில் இருந்த 21.20 சதவீதத்தில் இருந்து தற்போது 19.30 சதவீதமாக குறைந்துள்ளது.

எஃகு உற்பத்தித் தொழிலுக்கு மிக முக்கியமான மூலப்பொருளாக விளங்கும் கொக்கிங் நிலக்கரியின் இறக்குமதியும் 4.18 சதவீதம் சரிந்து 27.30 மில்லியன் டன்னாகப் பதிவாகியுள்ளது.

உள்நாட்டு நிலக்கரி விநியோகத்தை வலுப்படுத்த சரக்குப் போக்குவரத்து உட்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பை தொடர்ந்து கண்காணித்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

கோல் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுடன் ரயில்வே அமைச்சகம் இணைந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த பணிகளால், மின் பயன்பாட்டு நிறுவனங்களுக்குத் தடையின்றி நிலக்கரி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இறக்குமதிச் சார்பும் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
கிரீஸ் துறைமுகம் சென்றடைந்த இந்திய கடற்படையின் 'திரிசூல்'
அடுத்த செய்தி
குரூப் 2 முதல்நிலைத் தேர்வு: 3.97 லட்சம் பேர் எழுதினர்

தொடர்புடைய செய்திகள்